ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தியன் 2 படப்பிடிப்பு இடையில் காஜல் அகர்வால் திருப்பதியில் தரிசனம்!

இந்தியன் 2 படப்பிடிப்பு இடையில் காஜல் அகர்வால் திருப்பதியில் தரிசனம்!

கணவருடன் காஜல் அகர்வால்

கணவருடன் காஜல் அகர்வால்

தனது கணவர் கௌதமுடன் திருமலை கோவிலுக்கு செல்வது இதுவே முதல் முறை என்று கூறினார் காஜல் அகர்வால்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகை காஜல் அகர்வால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

    உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். தற்போது திருப்பதியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகை காஜல் அகர்வாலும், இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்புக்காக திருப்பதியில் இருக்கும் காஜல், தனது கணவர் கெளதம் கிட்சுலுவுடன் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.

    கோவில் நிர்வாகிகள் அவர்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து பிரசாதம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காஜல், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமியை தரிசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், தனது கணவர் கௌதமுடன் திருமலை கோவிலுக்கு செல்வது இதுவே முதல் முறை என்றும் கூறினார். அதோடு 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக தான் அங்கு இருப்பதாகவும் கூறினார்.

    அப்போது காஜல் அகர்வால் அடர் பச்சை நிற குர்தா பைஜாமாவுடன் ஆரஞ்சு நிற துப்பட்டா அணிந்திருந்தார். கௌதம் வெள்ளை நிற குர்தா பைஜாமா அணிந்து கோயில் அதிகாரிகள் வழங்கிய சிவப்பு பட்டு துண்டு அணிந்திருந்தார்.

    பொன்னியின் செல்வன் படத்துக்கு ரஜினிகாந்தின் சாய்ஸ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Kajal Agarwal