Home /News /entertainment /

காஜல் அகர்வாலுக்கு இந்த தொழிலதிபருடன் மும்பையில் திருமணமா?

காஜல் அகர்வாலுக்கு இந்த தொழிலதிபருடன் மும்பையில் திருமணமா?

கவுதம் | காஜல் அகர்வால்

கவுதம் | காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கும் மும்பையச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிச்சயதார்த்ததில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் இதுகுறித்து காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




இண்டீரியர் டிசைனர் துறையில் தொழிலதிபராக இருக்கிறார் கவுதம். இவர்களது திருமணம் மும்பையில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற இருப்பதாகவும், குடும்பத்தினர் மட்டும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை - ரசிகர் மன்ற பிரச்னை கொலையில் முடிந்தது எப்படி?

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’, சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பின்னரும் நடிப்பைத் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Kajal Agarwal, Kollywood, Tollywood

அடுத்த செய்தி