புதிய வாழ்க்கைக்குள் போக இருக்கிறோம் - திருமணத் தேதியை அறிவித்தார் காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்

காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதமுக்கும் அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது.

 • Share this:
  நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

  தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

  திருமண தகவலை உறுதிபடுத்தினார் காஜல் அகர்வால்


  சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கும் மும்பையச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிச்சயதார்த்ததில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் இதுகுறித்து காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

  இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: