முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: பேயாக திகிலூட்டும் காஜல் அகர்வால்.. மிரட்டும் 'கருங்காப்பியம்' பட டிரைலர்!

WATCH: பேயாக திகிலூட்டும் காஜல் அகர்வால்.. மிரட்டும் 'கருங்காப்பியம்' பட டிரைலர்!

கருங்காப்பியம்

கருங்காப்பியம்

Karungaapiyam Official Trailer | பிரசாந்த் இசையமைத்துள்ள இப்படத்தில் கலையரசன், யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன், அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர், குக் வித் கோமாளி புகழ், விஜே பார்வதி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டீகே என்றாலே ஹாரர் படங்களை இயக்குகிறவர் என ரசிகர்கள் மனதில் பதிந்து போயுள்ளது. இவரது புதிய படம், கருங்காப்பியம். காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஈரானிய நடிகை நொய்ரிகா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். பல காலகட்டங்களை கொண்ட இந்தக் கதையில், காஜல் அகர்வால் சுதந்திரத்துக்கு முந்தைய 1940 காலகட்டத்தைச் சேர்ந்தவராக வருகிறார்.

1940 இல் இருந்த பண்ணையாரின் மகளாக காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது. விசேஷ சக்திகள் கொண்ட அவர் மக்களின் மீது அன்பு கொண்டவர். அவர்களுக்கு நல்லது செய்கிறார்.அவரிடம் உள்ள விசேஷ சக்தியே அவருக்கு எப்படி எதிரியாகிறது என்பதுபோல் கதை எழுதப்பட்டுள்ளது.

பிரசாந்த் இசையமைத்துள்ள இப்படத்தில் கலையரசன், யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன், அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர், குக் வித் கோமாளி புகழ் விஜே பார்வதி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

வெற்றிவேல் டாக்கீஸ் தயாரித்திருக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாக உருவாகி உள்ளது. விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="882256" youtubeid="VXj-aSs4LE0" category="cinema">

நன்றி: AP International.

First published:

Tags: Actress Kajal Agarwal, Tamil Movies Trailer