முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் சினிமா பக்கம்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த காஜல் அகர்வால்!

மீண்டும் சினிமா பக்கம்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

கமல்ஹாசன் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக மீண்டும் திரையில் வருவார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.  தமிழில் கடைசியாக 'ஹே சினாமிகா' படத்தில் நடித்த நடிகை காஜல் அகர்வால், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, ஓய்வில் இருந்த காஜல் மீண்டும் வேலையை தொடங்கியுள்ளார். முன்னதாக, காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பை நவம்பரில் தொடங்கினார்.

செப்டம்பரில் தனது கதாபாத்திரத்திற்காக குதிரை சவாரி கற்றுக் கொண்ட அவர், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்றிரவு ஆந்திராவில் உள்ள புரோட்டத்தூருக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் கமல்ஹாசனுடன் ஆந்திராவில் உள்ள காந்திகோட்டா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதற்காக கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தில், கமல்ஹாசன் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக மீண்டும் திரையில் வருவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Kajal Agarwal