முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தியன் 2 செட்டில் காஜல் அகர்வால்... கவனம் பெறும் படம்!

இந்தியன் 2 செட்டில் காஜல் அகர்வால்... கவனம் பெறும் படம்!

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்த நடிகை சுகன்யா செயற்கை மேக்கப் போட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காஜல் அகர்வால் மேக்கப் அறையில் எடுத்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆனால் ஹார்ட் எமோஜியால் தனது முகத்தை மறைத்துள்ளார், தனது தோற்றம் வெளியாகக் கூடாது என்பதில் கவனத்தில் கொண்டு, காஜல் இப்படி மறைத்திருக்கிறார். கமல்ஹாசன் ஏற்கனவே 90 வயது சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக செயற்கை அலங்காரம் செய்துள்ள நிலையில், காஜல் அகர்வாலும் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டிருப்பாரோ என எண்ணுகின்றனர் ரசிகர்கள்.

பிளாக்பஸ்டர் விஜிலன்ட் த்ரில்லர் படமான இந்தியனின் தொடர்ச்சியான ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக மீண்டும் நடிக்கிறார். 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்த நடிகை சுகன்யா செயற்கை மேக்கப் (prosthetic makeup)  போட்டிருந்தார். தற்போது காஜல் அகர்வாலும் அதையே செய்வார் எனத் தெரிகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Kajal Agarwal