காஜல் அகர்வால் முதல்முறையாக கணவருடன் கொண்டாடிய ஹோலி பண்டிகை

காஜல் அகர்வால் முதல்முறையாக கணவருடன் கொண்டாடிய ஹோலி பண்டிகை

கணவருடன் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து ஹோலி கொண்டாடியுள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், “இந்த ஹோலி உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பு, நேர்மறை எண்ணம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும்”என்று கூறியுள்ளார்.

அதேபோல் காஜலின் கணவர் கவுதமும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஹோலி கொண்டாட்ட போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் கவுதம் கிச்லுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்ற காஜல் அகர்வால் 2020-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். 
View this post on Instagram

 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)


அதைத்தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் அடுத்ததாக கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால்
Published by:Sheik Hanifah
First published: