ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் காஜல் அகர்வால்?

கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் காஜல் அகர்வால்?

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை அக்டோபர் 2020-ல் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் காஜல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை காஜல் அகர்வால் புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  கோலிவுட்டின் லேட்டஸ்ட் அம்மா காஜல் அகர்வால் இப்போது உடல் மெலிந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். அவர் தற்போது பெண்களை மையமாகக் கொண்ட பாத்திரங்களை விட, சில கவர்ச்சியான கதாபாத்திரங்களைத் தேடுவது போல் தெரிகிறது.

  தற்போது ஒரு ஸ்பெஷல் பாடலுக்காக 'புஷ்பா 2' குழு காஜலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இந்த செய்தியால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் காஜல், புஷ்பா 2 படத்தில் நடனமாடும் வாய்ப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என கருதுகிறாராம்.

  சமீபத்தில் ஒரு இயக்குனர் பெண்ணை மையப்படுத்திய கதையுடன் காஜலை அணுகியுள்ளார். ஆனால் அவர் தான் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தை விரும்புவதாகக் கூறி அந்த கதையை மறுத்தார். ஆகையால் புஷ்பா படத்தில் நடனமாட படக்குழு அவரை அணுகினால், காஜல் கிரீன் சிக்னல் தருவார் என்கிறது நெருங்கிய வட்டாரம்.

  முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு திடீர் விசிட் செய்த காஜல்!

  தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை அக்டோபர் 2020-ல் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் காஜல். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிப்பில் இருந்து ஓய்வெடுத்த காஜல், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Samantha, Kajal Agarwal