நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. BollywoodShaadis.com இன் அறிக்கையின்படி, செவ்வாயன்று காஜல் மற்றும் கௌதம் தங்கள் முதல் குழந்தையை பெற்றனர். இதனை காஜல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனது கர்ப்பத்தை அறிவித்ததிலிருந்து, தனது மகப்பேறு போட்டோஷூட் படங்களை பகிர்ந்துக் கொண்டார் காஜல்.
கர்ப்ப காலத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த அவர், தனது பேபி பம்ப் மற்றும் கர்ப்ப கால பளபளப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களைப் பகிர்ந்துக் கொண்டார். கர்ப்பிணிப் பெண்களை பாடி ஷேம் செய்யும் ட்ரோல்களையும் அவர் சாடினார்.
இந்த விலகலுக்கு என் மகன்கள் தான் காரணம் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்
அக்டோபர் 30, 2020 அன்று, காஜல் மற்றும் கௌதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் தம்பதிகளுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, கர்ப்பம் பற்றிய வதந்திகள் பரவ ஆரம்பித்தன, ஆனால் ஜோடி அதை ஒப்புக்கொள்ள மறுத்தனர்.
இருப்பினும், காஜல் இறுதியில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், "இதோ 2022 உங்களைப் பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டு கர்ப்பிணி பெண்ணின் எமோஜியை பகிர்ந்தார். அது அவரின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தியது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.