Home /News /entertainment /

இந்தியன் 2-வில் நடிப்பதை உறுதி செய்த காஜல் அகர்வால்!

இந்தியன் 2-வில் நடிப்பதை உறுதி செய்த காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

'இந்தியன் 2' இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமானதால், படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது.

    குழந்தை பேற்றுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

    பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் தற்போது தனது தாய்மையை அனுபவித்து வருகிறார். குழந்தை பேற்றுக்குப் பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ள அவர் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்திய ஊடக உரையாடலில், 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதை உறுதிசெய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் காஜல் அகர்வால்.

    அதோடு 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 13-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும் அவர் தெரியப்படுத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எப்போது புத்துயிர் பெறும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் வயதான பெண்ணாக நடிக்கிறார்.

    'இந்தியன் 2' இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமானதால், படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது விரைவில் படத்தை மீண்டும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர்.

    அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் கமல் - விஜய்... எவ்வளவு தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில், கமல்ஹாசன் 'இந்தியன் 2' வேலைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். படத்திற்காக அவர் தனது தோற்றத்தை மாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோரும் நடித்துள்ளனர். மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் காலமானதால், அவர்களுக்கு மாற்றாக நடிக்கும் நடிகர்களை தயாரிப்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யவில்லை.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Kajal Agarwal

    அடுத்த செய்தி