Home /News /entertainment /

இந்தியன் 2 படத்திற்காக ஹார்ஸ் ரைடிங் பயிற்சியில் காஜல் அகர்வால் - வீடியோ

இந்தியன் 2 படத்திற்காக ஹார்ஸ் ரைடிங் பயிற்சியில் காஜல் அகர்வால் - வீடியோ

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

Kajal Agarwal : இந்தியன் 2 படத்திற்காக காஜல் அகர்வால் ஹார்ஸ் ரைடிங் பயிற்சி எடுத்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழில் பழநி படம் மூலம் அறிமுகமானார். முதல் படம் காஜல் அகர்வாலுக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது. இந்த படம் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் காஜல் பிரபலமானார்.அதையடுத்து தொடர்ந்து தமிழ், தெலுங்கில் கலக்கி வந்தார். தமிழில் விஜய் உடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.

    காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் கவுதம் - காஜல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பு குழந்தையுடன் அதிக நேரம் செலவழித்து வந்த காஜல், தற்போது தனக்கான நேரத்தை செலவிட தயாராகியுள்ளார்.



    ஆம்.காஜல் தற்போது ஹார்ஸ் ரைடிங் பயிற்சி எடுத்து வருகிறார். இந்தியன் 2 படத்திற்காக இந்த பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.பயிற்சியாக தொடங்கிய ஒன்று தற்போது பொழுதுப்போக்காக மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ‘பிரசவத்திற்கு 4 மாதங்களுக்கு பிறகு நான் வேலைக்கு திரும்பினேன். இது புதிதாக தொடங்குவது போல் இருக்கும் என்பதை நான் உணரவில்லை. என் உடல் எப்படி இருந்ததோ அதே போல் இல்லை.பிரவசத்திற்கு முன்பு நாள் முழுவதும் வேலை பார்த்த பின்பு கூட ஜிம்மிற்கு செல்வேன்’. குழந்தைக்குப் பிறகு, என் ஆற்றல் நிலைகளைத் திரும்பப் பெறுவது கடினமாக உள்ளது.



    ‘நம் உடல்கள் மாறலாம்’. நமக்குள் ஒரு அடங்காத பேஷன் மாற தேவையில்லை. நாம் நமக்காக தொடர்ந்து ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். இது நம் தேர்வுகளில் குற்ற உணர்ச்சியில்லாமல் இருப்பதற்கும், நாம் எதைத் தேர்வு செய்கிறோம் என்பதைப் பற்றியது. இந்தியன் 2 படக்குழுவினருடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேலையில் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு பின்னர் அவற்றை பொழுதுபோக்காக பின்பற்றுகிறேன். இந்த தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி . தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் என்னைப் மேம்படுத்தி கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி என்று கூறி ஹார்ஸ் ரைட் செய்யும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

     

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actress Kajal Agarwal, Indian 2

    அடுத்த செய்தி