• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மதுபான விளம்பரத்தில் கணவருடன் காஜல் அகர்வால்

மதுபான விளம்பரத்தில் கணவருடன் காஜல் அகர்வால்

கணவருடன் காஜல் அகர்வால்

கணவருடன் காஜல் அகர்வால்

‘ஹே சினாமிகா’, ‘கருங்காப்பியம்’, ‘கோஸ்டி’ ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், கடந்தாண்டு தொழிலதிபர் கெளதம் கிட்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

  • Share this:
    கணவருடன் மதுபானம் ஒன்றிற்கு விளம்பரம் செய்த நடிகை காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வார்ல். ஆனால் தெலுங்கில் ராம் சரணுடன் இணைந்து நடித்த மகதீரா திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் காஜல் அகர்வாலை முக்கியமான நடிகையாக மாற்றியது.

    அத்ன் பிறகு தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி போன்ற படங்களில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்தார். ஆனால் தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




    தற்போது ‘ஹே சினாமிகா’, ‘கருங்காப்பியம்’, ‘கோஸ்டி’ ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், கடந்தாண்டு தொழிலதிபர் கெளதம் கிட்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் கணவருடன் பிரபல மதுபானம் ஒன்றிற்கு விளம்பரம் செய்திருக்கிறார் காஜல். இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு முன்னணி நடிகை இப்படி செய்யலாமா? என தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: