• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kaithi Remake: இந்தியில் ரீமேக்காகும் கைதி! ஹீரோ யார் தெரியுமா?

Kaithi Remake: இந்தியில் ரீமேக்காகும் கைதி! ஹீரோ யார் தெரியுமா?

கைதி

கைதி

கைதியின் சிறப்பம்சமே படத்தில் நாயகி, காதலி, பாட்டு, காமெடி என எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இல்லாமல் இருந்ததே.

  • Share this:
    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது. அஜய் தேவ்கான் கார்த்தி நடித்த வேடத்தில் நடிக்க உள்ளார்.

    மாநகரம் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் முழுநீள ஆக்ஷன் படமான இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சப் டைட்டிலுடன் இணையத்தில் இப்படம் பார்க்கக் கிடைக்கிறது. வட இந்திய ரசிகர்களும் கைதி பார்த்து புகழ்ந்து பின்னூட்டம் இட்டுள்ளனர்.

    இந்தப் படத்தை இந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். கைதியின் சிறப்பம்சமே படத்தில் நாயகி, காதலி, பாட்டு, காமெடி என எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இல்லாமல் இருந்ததே. ஆனால், இந்திக்கு ஏற்ப மாற்றுகிறோம் என்று நாயகனுக்கு மனைவி இருப்பது போல் கதையை மாற்றியுள்ளனர். மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கோடிகள் கொடுத்து காஜலை ஒப்பந்தம் செய்த பின் டூயட் வைக்காமல் இருப்பார்களா? இவர்கள் கதையில் செய்திருக்கும் மாற்றங்களைப் பார்த்தால் கைதியை கைமா செய்யாமல் விடமாட்டார்கள் போல.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: