சாவுறதா இருந்தாலும் சண்டை போட்டு சாகணும் சார்... மிரட்டும் கைதி ட்ரெய்லர்!

news18
Updated: October 7, 2019, 7:18 PM IST
சாவுறதா இருந்தாலும் சண்டை போட்டு சாகணும் சார்... மிரட்டும் கைதி ட்ரெய்லர்!
நடிகர் கார்த்தி
news18
Updated: October 7, 2019, 7:18 PM IST
‘கைதி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


கைதி தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

First published: October 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...