’கைதி’ பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் நடிகர் இவரா?

’கைதி’ பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் நடிகர் இவரா?
கைதி படத்தில் நடிகர் கார்த்தி
  • Share this:
‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

முழுக்க இரவிலேயே நடக்கும் கதை, ஹீரோயின், பாடல்கள் என வழக்கமான சினிமா பாணியிலிருந்து விலகி தனித்து நிற்கும் இந்தப் படத்தை பலரும் பாராட்டியதோடு வசூலையும் வாரிக் குவித்தது.


இந்தப் படத்தின் 2-ம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று படக்குழு கூறியிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெறுவதிலும் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கைதி படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வந்த சமயத்தில் நடிகர் அஜய்தேவ்கன் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading