ஜப்பானில் வெளியாகும் கைதி!

கைதி

கைதி

கைதி திரைப்படம் கைதி டில்லி (Kaithi Dilli) என்ற பெயரில் ஜப்பானில் நவம்பர் 19-ம் தேதி வெளியாகிறது.

 • Share this:
  கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் கைதி. எதிர்பாராத சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்த இந்தப் படம் ஜப்பானில் ஜப்பானிய மொழியில் வெளியாகிறது.

  ஜப்பானில் அரிதாகவே இந்தியப் படங்கள் வெளியாகும். பெரும்பாலான ஜப்பானியர்களுக்கு தெரிந்த ஒரே நடிகர் ரஜினி. அவரது முத்து திரைப்படம் அங்கு பல வாரங்கள் ஓடியது. முத்துவில் ரஜினியின் தில்லானா தில்லானா பாடலுக்கான நடனம் ஜப்பானியர்களை வசீகரித்தது. அவர்கள் தொடர்ச்சியாக ரஜினியின் படங்களை பார்க்க ஆரம்பித்தனர். ரஜினி படங்கள் வெளியாகும் போது ஒன்றிரண்டு ஜப்பானியர்களாவது சென்னை வருவது வாடிக்கையானது. அண்ணாத்தக்குதான் யாரும் வந்ததாக தெரியவில்லை, கொரோனா பயம்.

  கைதி திரைப்படம் கைதி டில்லி (Kaithi Dilli) என்ற பெயரில் ஜப்பானில் நவம்பர் 19-ம் தேதி வெளியாகிறது. ஆக்ஷனுடன் சென்டிமெண்டை கலப்பதில் கொரியர்களைப் போலவே ஜப்பானியர்களும் வல்லவர்கள். இந்த இரண்டும் கலந்த கலவை கைதி. அதனால் படம் அவர்களுக்குப் பிடிக்க வாய்ப்புள்ளது.

  கைதி படத்தை எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸும், திருப்பூர் விவேக்கின் விவேகானந்தா பிக்சர்ஸும் இணைந்து தயாரித்திருந்தன. இந்நிறுவனங்களுக்கு கோடிகளில் லாபத்தை கைதி அளித்தது. அதனால், கைதி 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இவர்கள் இருக்கிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: