Home /News /entertainment /

கார்த்தி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் கைதி 2 ஆரம்பம்!

கார்த்தி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் கைதி 2 ஆரம்பம்!

கைதி

கைதி

விக்ரம் படத்தை முடித்த உடன் கைதி இரண்டாம் பாகத்தை தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.

கைதி படத்தின் ப்ரீக்வெல் அடுத்த வருடம் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.2019 கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்க, ஆர்.எஸ்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தை தயாரித்திருந்தது. ஒரே இரவில் நடக்கும் கதை. நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், பெஞ்சமின் உள்பட பலர் நடித்திருந்தனர்.

நாயகி, காதல், காமெடி, பாடல்கள் எதுவுமின்றி வெளியாகி வெற்றி பெற்றது. இதனை இந்தியில் அஜய்தேவ் கான் நடிப்பில் ரீமேக் செய்கின்றனர்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என அறிவித்திருந்தனர். அதன்படி விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் முடித்ததும் கைதி இரண்டாம் பாகத்தை அவர் தொடங்குகிறார். இந்த இரண்டாம் பாகம் கைதியின் ப்ரீக்வெலாக இருக்கும் என கூறப்படுகிறது. கார்த்திக்கும், லாக்கப்பில் அடைபட்டிருக்கும் ஹரிஷ் உத்தமனுக்கும் உள்ள முன்பகையைச் சொல்லும் படமாக இந்த இரண்டாம் பாகம் இருக்கும்.

இதையும் படிங்க.. அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

விக்ரம் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. அதன் பிறகே கைதி இரண்டாம் பாகத்தை அவர் இயக்குவதாக திட்டம். விஜய் அடுத்து நடிக்கும் வம்சி பைடிபள்ளியின் படம் இன்னும் தொடங்கப்படவில்லை. அதை முடித்து அவர் ப்ரீயாக பல மாதங்களாகும்.

இதையும் படிங்க.. நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

அதனால், விக்ரம் படத்தை முடித்த உடன் கைதி இரண்டாம் பாகத்தை தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார்.விரைவில் கைதி 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actor Karthi, Kollywood, Lokesh Kanagaraj

அடுத்த செய்தி