Home /News /entertainment /

‘கடுவா’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு… ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹீரோபிருத்விராஜ்

‘கடுவா’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு… ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹீரோபிருத்விராஜ்

கடுவா படத்தில் பிருத்விராஜ்

கடுவா படத்தில் பிருத்விராஜ்

Kaduva Movie : கடுவா திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘கடுவா’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாரம் வியாழக்கிழமை (ஜூன் 30) ​​வெளியாகவிருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

    இதுதொடர்பாக பிருத்விராஜ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிருத்விராஜ் தனது பதிவில் கூறியிருப்பதாவது-

    பிரபல திரைப்பட  இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கிய நான்நடித்துள்ள ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான “கடுவா” படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுகிறது.

    ’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' - சத்யராஜின் திரைப்பயணம்!

    சில எதிர்பாராத சூழ்நிலைகளால் வெளியீடு மேலும் ஒரு வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், படத்திற்கான புரொமோஷன் பணிகள் திட்டமிட்டபடி நடக்கும்.

    ஜூலை 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடுவா படம் வெளியாகும். வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதற்காக திரைப்பட ஆர்வலர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு பிருத்விராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.



    90களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கடுவா’ திரைப்படம் , கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவரின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடிக்கிறார்.  'கடுவா' படத்திற்கு  ஜினு வி ஆபிரகாம் வசனம் எழுதியுள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஷமீர் முகமது படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!

    ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடுவா திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood, Mollywood

    அடுத்த செய்தி