Home /News /entertainment /

‘விரைவில் தெலுங்கு படம் இயக்கவுள்ளேன்’ - நடிகர் பிருத்வி ராஜ் அறிவிப்பு

‘விரைவில் தெலுங்கு படம் இயக்கவுள்ளேன்’ - நடிகர் பிருத்வி ராஜ் அறிவிப்பு

கடுவா படத்தில் பிருத்விராஜ்

கடுவா படத்தில் பிருத்விராஜ்

Kaduva Prithviraj : மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை பிருத்வி ராஜ் இயக்கியுள்ளார்.

    தெலுங்கு படம் ஒன்றை விரைவில் இயக்கப் போவதாக மலையாள நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். சமீப காலமாக பிருத்விராஜின் மார்க்கெட் உயரத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தற்போது கடுவா என்ற படத்தில் பிருத்விராஜ் நடித்து முடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. வரும் 30-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இதையொட்டி படத்திற்கான புரொமோஷன் பணிகளில் பிருத்விராஜ் தீவிரம் காட்டி வருகிறார். ஐதராபாத்தில் ஊடகத்தினரை சந்தித்த போது பிருத்விராஜ் கூறியதாவது-

    இதையும் படிங்க - முதன்மை கதாப்பாத்திரத்தில் அம்மு அபிராமி நடிக்கும் 'குதூகலம்' 

    தெலுங்கில் எனக்கு அற்புதமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ளனர். விரைவில் தெலுங்குப் படம் ஒன்றை இயக்குவேன்.

    இதையும் படிங்க - வைரலாகும் விக்கி – நயன்தாரா ஹனிமூன் ஃபோட்டோஸ்…

    தெலுங்கு நட்சத்திரம் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் எனக்கு முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பிரபாஸ் படம். இந்தப் படம் சிறப்பாக உருவாகி  வருகிறது. இது சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ஏற்கனவே, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை பிருத்வி ராஜ் இயக்கியுள்ளார். மெகா ஹிட்டான இந்த திரைப்படம் தெலுங்கில் காட் ஃபாதர் என்ற பெயரில் உருவாகி  வருகிறது.

    இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா இயக்க, சிரஞ்சீவி, சல்மான் கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் வெளியான ஜனகன மன திரைப்படம் ஹிட்டாகி, பிருத்வி ராஜின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood, Tollywood

    அடுத்த செய்தி