Kadhalan: ஆண்-பெண்களுடன் தினமும் நள்ளிரவு விருந்து - ’காதலன்’ பட நடிகை கைது

நடிகை கவிதாஸ்ரீ

நடிகை கவிதாஸ்ரீ ஒவ்வொரு இரவும் ஆண்களுக்கு 1999/- ரூபாய் வசூலித்து, பெண்களுக்கு இலவச எண்ட்ரி வழங்கியது கண்டறியப்பட்டது.

  • Share this:
    கொரோனா ஊரடங்களில் ஆண் - பெண் நண்பர்களுக்கு இரவு விருந்து நடத்திய நடிகை கவிதாஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், பணக்காரர்களுக்கும் புகழ்பெற்றவர்களுக்கும் சொந்தமான தனியார் வீடுகளிலும் டி.ஜே-வுடன் கூடிய இரவு நேர பார்ட்டிகள் நடக்கின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, கானாத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான பங்களாவில் டிஜே-வுடன் கூடிய இரவு பார்ட்டிகள் தவறாமல் நடப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர் காவல்துறையினர் அந்த பங்களாவை சோதனையிட்டனர். அதில் சுமார் பதினைந்து பெண்கள் மற்றும் சம எண்ணிக்கையிலான ஆண்கள் விலையுயர்ந்த மதுபானம், நடனம் என கேளிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. நடிகை கவிதாஸ்ரீ தான் அந்த பங்களாவை வாடகைக்கு எடுத்து, பார்ட்டி ஹவுஸாக மாற்றி, ஒவ்வொரு இரவும் ஆண்களுக்கு 1999/- ரூபாய் வசூலித்து, பெண்களுக்கு இலவச எண்ட்ரி வழங்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடிகையை கைது செய்து, அந்த வளாகத்திற்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்தனர்.

    பிரபுதேவா, நக்மா மற்றும் வடிவேலு நடித்த ஷங்கரின் 'காதலன்' படத்தில் இரக்கமற்ற காவலராக நடித்தவர் தான் கவிதாஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: