• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இணைய பிரபலம் ஜி.பி.முத்து மீது நடிகர் காதல் சுகுமார் கொலை மிரட்டல் புகார்

இணைய பிரபலம் ஜி.பி.முத்து மீது நடிகர் காதல் சுகுமார் கொலை மிரட்டல் புகார்

காதல் சுகுமார்

காதல் சுகுமார்

ஜிபி முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் யூடியூபர் ஜி.பி முத்து உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி "காதல்" பட சுகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

    காதல், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிவர் சுகுமார். இவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதல் சுகுமார், ”கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பள்ளி மாணவர்களை நல்வழி பாதையில் கொண்டு செல்லும் படியாக சமூக வலைதளங்களில் இலக்கியா, ஜிபி முத்து உட்பட பல நபர்கள் ஆபாசங்கள் நிறைந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனை தடுத்து நிறுத்த வேண்டி சமீபத்தில் தனது நண்பரான சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளருமான ஏழுமலை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தானும் ஊடகங்கள் வாயிலாக பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்தேன்.

    ஊடகங்களில் தான் கருத்து தெரிவித்தது தொடர்பாக அவர்களின் தூண்டுதலின் பேரில் நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அவர் கூறினார். கொலை மிரட்டல் விடுத்து வரக்கூடிய நபர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: