Kadhal Babu: சடலமாக மீட்கப்பட்ட ’காதல்’ பட நடிகர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்

Kadhal Babu: சடலமாக மீட்கப்பட்ட ’காதல்’ பட நடிகர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்

’காதல்’ பாபு

சமீபத்தில் அவரது தாய், தந்தை இருவரும் மரணமடைந்ததால், மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

  • Share this:
    ’காதல்’ படத்தில் நடித்த நடிகர் பாபு சடலமாக மீட்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தப் படம் ’காதல்’. இயக்குநர் ஷங்கர் இதனை தயாரித்திருந்தார். நடிகர் பரத் ஹீரோவாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்த இந்தப் படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    Asuran GV Prakash: ’அசுரன்’ இசையை விட ‘விஸ்வாசம்’ சிறப்பா? நெட்டிசன்கள் கேள்வி

    இந்த படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. மேன்சனில் தங்கியிருக்கும் வருங்கால இயக்குநரிடம், சான்ஸ் கேட்கப் போவதாக அவரின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். ராசி விருச்சிகம், தான் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த் போல வர வேண்டும் என்பதற்காக, தனது பெயரை விருச்சிககாந்த் என மாற்றிக் கொண்டதாக பெயர் காரணம் கூறுவார். அதோடு ’ஆனா டைரக்டா ஹீரோ தான்’ என்பார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் ரசிகர்களிடம் நன்றாக ரீச் ஆனது.

    Bigg Boss Tamil: ’பிக் பாஸ் 5-க்கு என்னால போக முடியாது’ – காரணம் சொன்ன நகுல்…

    ஆனால் அதற்குப் பிறகு பாபுவுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். சமீபத்தில் அவரது தாய், தந்தை இருவரும் மரணமடைந்ததால், மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். அவர் சாலைகளில் சுற்றித்திரியும் புகைப்படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, திரைத்துறையினர் சிலர் அவருக்கு உதவி செய்தனர். ஆனால் ஊரடங்குக்கு பிறகு பாபுவின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சாலையோரம் நின்ற ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: