நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த ’காதல்’ அருண்!

காதல் அருண்

'காதல்' படத்தில் பரத்தின் உதவியாளர் கதாபாத்திரத்தில் கரட்டாண்டியாக நடித்த குழந்தை நட்சத்திரம் அருணை பார்வையாளர்கள் மறக்க முடியாது.

 • Share this:
  காதல், சிவகாசி படங்களில் நடித்த அருண், தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார்.

  இயக்குநர் ஷங்கர் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கிய கிளாசிக் திரைப்படம் 'காதல்' 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இன்றளவும் தமிழ் சினிமாவில் படமாக்கப்பட்ட சிறந்த காதல் கதைகளில் காதல் படமும் இடம்பெற்றிருக்கிறது. இதில் பரத் மற்றும் சந்தியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

  'காதல்' படத்தில் பரத்தின் உதவியாளர் கதாபாத்திரத்தில் கரட்டாண்டியாக நடித்த குழந்தை நட்சத்திரம் அருணை பார்வையாளர்கள் மறக்க முடியாது. அவரது நகைச்சுவையான குறும்புகள், தீவிரமான காதல் படத்திற்கு கொஞ்சம் ரிலாக்சேஷனை வழங்கியது. அந்த பாத்திரம் மறக்க முடியாததாக மாறியது. அருண் பின்னர் தளபதி விஜய்யின் 'சிவகாசி' உள்ளிட்ட வேறு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அருண் சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதில் 'காதல்' சுகுமார் தனது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: