சூர்யாவுடன் நேரடியாக மோதும் விக்ரம்... கடாரம் கொண்டான் ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Web Desk | news18
Updated: April 16, 2019, 6:46 PM IST
சூர்யாவுடன் நேரடியாக மோதும் விக்ரம்... கடாரம் கொண்டான் ரிலீஸ் தேதி அறிவிப்பு?
விக்ரம்
Web Desk | news18
Updated: April 16, 2019, 6:46 PM IST
கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.
இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.Loading...

ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தின் டீசர் ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் மே 31-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக இதேதேதியில் சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவான என்.ஜி.கே படமும் திரைக்கு வருகிறது. இதனால் என்.ஜி.கே படத்துடன் நேரடியாக மோதுகிறது விக்ரமின் கடாரம் கொண்டான்.

வீடியோ பார்க்க: நட்புக்காக ஓட்டு கேட்டு வந்தேன் - சமுத்திரகனி


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...