திரைப்பட படப்பிடிப்பு, திரையரங்க திறப்புக்கு இப்போது அனுமதியில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கு தற்போது அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

திரைப்பட படப்பிடிப்பு, திரையரங்க திறப்புக்கு இப்போது அனுமதியில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி‌ அருகே உள்ள விளாத்திகுளத்தில் புதிய தாலுகா அலுவலக கட்டட பணிகள் தொடக்க விழா, பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கோவில்பட்டியில்  பாண்டமங்கலம் ஊராட்சி பகுதியில் நியாயவிலை கடை புதிய கட்டிடம் திறப்பு  உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் கலந்துகொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "திரைப்பட படப்பிடிப்பு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள்அரங்கு போதுமானது. 60 பேர் இருந்தாலே போதும். ஆனால் திரைப்பட படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும். அந்த பகுதியில் பார்வையாளர்கள் கூட்டம் கூடும்.


அதுதவிர திரைப்பட படப்பிடிப்பு நடத்தும் பகுதியில் பல்வேறு அனுமதி வாங்கவேண்டியுள்ளது . அதனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் அனுமதிக்க இயலாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார். திரையரங்கு திறப்பு குறித்து மத்திய அரசு இதுவரை முடிவு சொல்லவில்லை. எனவே இந்த மாதம் திரையரங்கு திறக்க வாய்ப்பில்லை“ என்றார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading