இனி ஆன்லைனில்தான் சினிமா டிக்கெட்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

டிக்கெட் விற்பனையை கணினி மயமாக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் ஆயத்தக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இனி ஆன்லைனில்தான் சினிமா டிக்கெட்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்
அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • News18
  • Last Updated: September 6, 2019, 6:10 PM IST
  • Share this:
சினிமா டிக்கெட் விற்பனையை அரசு கண்காணிக்க வகை செய்யும் ஆன்லைன் திட்டம், ஒரு வார காலத்திற்குள் முழு வடிவம் பெறும் என்று, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இணையதளம் மூலம் டிக்கெட் புக் செய்தால் கூடுதல் சர்வீஸ் சார்ஜ் பெறப்படுகிறது என்பது போன்ற புகார்கள், திரை ரசிகர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இவற்றுக்கு தீர்வு காணும் விதமாகவும், சினிமா டிக்கெட் விற்பனையை அரசு கண்காணிக்கும் வகையிலும், புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.


Also read... Chennai Power Cut : சென்னையில் சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (07-09-2019) மின்தடை!

டிக்கெட் விற்பனையை கணினி மயமாக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் ஆயத்தக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Loading...

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஒரு வாரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். அடுத்த கூட்டத்தில் தனியார் டிக்கெட் விற்பனையாளர்களை அழைத்து பேசவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Also see...

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...