• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yashika Anand: ’யாஷிகாவின் விபத்தால் படத்துக்கு பாதிப்பில்லை’ - கடமையை செய் இயக்குநர்

Yashika Anand: ’யாஷிகாவின் விபத்தால் படத்துக்கு பாதிப்பில்லை’ - கடமையை செய் இயக்குநர்

கடமையை செய் மேக்கிங் ஸ்டில்

கடமையை செய் மேக்கிங் ஸ்டில்

எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்து வந்தார்.

  • Share this:
    நடிகை யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சையில் உள்ளார். காரில் அவருடன் பயணித்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே இறந்தார். யாஷிகா படுகாயங்களுடன் தப்பித்தார். இன்னும் சில மாதங்கள் அவர் படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

    யாஷிகாவின் இந்த நிலைமை காரணமாக அவர் நடித்து வந்த படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், எங்களின் கடமையை செய் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என அப்படத்தின் இயக்குனர் வேங்கட் ராகவன் கூறியுள்ளார்.

    yashika anand, yashika anand car accident, yashika anand accident, yashika anand friend death, yashika anand, yashika name meaning, yashika instagram, yashika age, yashika anand salary, yashika friend, yashika aannand ragalahari, yashika aannand twitter, yashika anand driving licence, யாஷிகா ஆனந்த், யாஷிகா ஆனந்த் கார் விபத்து, யாஷிகா ஆனந்த் தோழி மரணம், யாஷிகா ஆனந்த் ஓட்டுநர் உரிமம், யாஷிகா ஆனந்த் படங்கள், bigg boss yashika, yashika
    கடமையை செய் மேக்கிங் ஸ்டில்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்து வந்தார். அவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சார்லஸ் வினோத், மோகன் வைத்யா என பலர் நடித்து வந்தனர். யாஷிகாவுக்கு நேர்ந்த விபத்து குறித்துப் பேசிய வேங்கட ராகவன், "யாஷிகா தொழில்பக்தியும், திறமையும் கொண்ட நடிகை. அவருக்கு நேர்ந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட போது அதிர்ச்சி அடைந்தோம். கடமையை செய் படத்தைப் பொறுத்தவரை, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டோம். அதனால், யாஷிகாவின் இன்றைய நிலை படத்தைப் பாதிக்காது. படம் திரையரங்கில் வெளிவருகையில் பூரண நலத்துடன் அவர் தியேட்டரில் அமர்ந்து படத்தைப் பார்ப்பார்" என்று நம்புவதாக கூறினார்.

    இவர் இதற்கு முன், மலையாளத்தில் வெற்றி பெற்ற வெள்ளிமூங்கா திரைப்படத்தின் தமிழ் ரீமேக் முத்தின கத்திரிக்காயை இயக்கியிருந்தார். சுந்தர் சி. நடித்த அப்படம் சுமாராகவே போனது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: