ஆபாச போஸ்டர்... விஜய் சேதுபதிக்கு இது அவமானம் - வலுக்கும் எதிர்ப்பு

படக்குழு அறிவித்தபடி நடிகர் விஜய்சேதுபதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆபாச போஸ்டர்... விஜய் சேதுபதிக்கு இது அவமானம் - வலுக்கும் எதிர்ப்பு
பேட்ட - விஜய் சேதுபதி
  • News18
  • Last Updated: February 14, 2019, 5:34 PM IST
  • Share this:
இரட்டை அர்த்த வசனங்களுடன் சென்னை முழுக்க ஒட்டப்பட்டுள்ள சினிமா விளம்பரம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஆனந்தராஜ் இயக்கத்தில் ‘கடல போட ஒரு பொண்ணு வேணும்’என்ற படம் உருவாகிறது. இந்தப் படத்தில் பிரபல டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோவாகவும், மனீஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஜே ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளது.

காதலர் தினமான இன்று இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் படத்தின் பாதி டைட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பர பேனர்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் படத்துக்கான போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போஸ்டருக்கு மகளிர் அமைப்பினரும், முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோல ஒருதரம் கெட்ட விளம்பரத்தோடு வரும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டால் அது அவருக்கு பெருமை அல்ல அவமானம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நடிகர் விஜய்சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில்  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - வீடியோ

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்