Home /News /entertainment /

கே.ஜி.எஃப். சாயலில் வெளியான கன்னட பட டீசர்… 24 மணி நேரத்தில் 10 மில்லியன் வியூசை தாண்டியது…

கே.ஜி.எஃப். சாயலில் வெளியான கன்னட பட டீசர்… 24 மணி நேரத்தில் 10 மில்லியன் வியூசை தாண்டியது…

கப்ஜா படத்தின் டீசர் போஸ்டர்

கப்ஜா படத்தின் டீசர் போஸ்டர்

Kabzaa : கப்ஜா படத்தின் டீசர் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அடுத்ததாக ட்ரெய்லரை ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள கப்ஜா என்ற கன்னட படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 10 மில்லியன் வியூசை குவித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    2018-ல் வெளியான கே.ஜி.எஃப்., கடந்த ஜூன் மாதம் வெளியான கே.ஜி.எஃப். 2 ஆகிய கன்னட மொழி படங்கள் இந்திய சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. படம் முழுவதுமே மாஸ் காட்சிகள் இருந்ததால் இதனை ஆக்சன் பட ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

    குறிப்பாக கே.ஜி.எஃப். 2 திரைப்படம் ரூ. 1200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. கிரே, கோல்டு கலர் கோடிங், அதிரடியான பின்னணி இசை, ஸ்லோ மோஷன் காட்சிகள், தெறிக்கும் பில்டப் வசனங்கள் உள்ளிட்டவை கே.ஜி.எஃப் படங்களின் சிக்னேச்சராக அமைந்தன. இதற்கு படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் முக்கிய காரணம்.

    என்ன சிம்ரன் இதெல்லாம்! செம்ம கவர்ச்சியான லுக்கில் தர்ஷா குப்தா..

    இந்நிலையில் கே.ஜி.எஃப். படங்களில் இடம்பெற்ற சில அம்சங்களுடன் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் ஆர். சந்த்ரு இயக்கத்தில், கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கத்தில் கப்ஜா என்ற படம் உருவாகியுள்ளது.

    இதன் டீசர் நேற்று வெளியாகி 24 மணிநேரத்தில் 10 மில்லியன் வியூசை தாண்டி வரவேற்பை பெற்றுள்ளது.



    கப்ஜாவின் கதைக் களம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. 1942 – 1987 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

    காந்தியவாதியான தந்தை வன்முறையால் கொல்லப்படும்போது, 2 மகன்களில் ஒருவர் தாதாவாகவும், இன்னொருவர் போலீஸ்அதிகாரியாகவும் மாறுகிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

    விதவிதமான ஜிம் அவுட் ஃபிட்டில் பூஜா ஹெக்டே - போட்டோஸ்

    படம் தியேட்டர்களில் வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரிலீஸ் அறிவிக்கப்படவில்லை. கப்ஜா படத்தின் டீசர் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அடுத்ததாக ட்ரெய்லரை ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். தமிழ் உள்பட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: KGF, KGF 2, Kollywood

    அடுத்த செய்தி