விஷாலுக்கு வில்லனாகும் கபீர் சிங்!

news18
Updated: August 5, 2019, 5:27 PM IST
விஷாலுக்கு வில்லனாகும் கபீர் சிங்!
நடிகர் கபீர் துஹான் சிங்
news18
Updated: August 5, 2019, 5:27 PM IST
வேதாளம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கபீர் சிங் விஷாலின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

ஆம்பள படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டு வந்தது. அடுத்தகட்டமாக ஹைதராபாத், மற்றும் வட இந்தியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் விஷாலுக்கு வில்லனாக நடித்துள்ளார்.


சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள கபீர் சிங், இந்தப் படத்தில் உலகை அச்சுறுத்தும் தீவிரவாதியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக நிஜ தீவிரவாதிகளின் பேட்டிகளையும், தீவிரவாதிகளை மையப்படுத்திய படங்களையும் பார்த்து பயிற்சி எடுத்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகும் இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.

வீடியோ பார்க்க: சாதி ஒழிப்பு VS தமிழ் சினிமா

Loading...

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...