கபிர் சிங்: 'அர்ஜுன் ரெட்டி' இந்தி ரீமேக் - மிரட்டும் ட்ரெய்லர் வீடியோ

news18
Updated: May 13, 2019, 2:42 PM IST
கபிர் சிங்: 'அர்ஜுன் ரெட்டி' இந்தி ரீமேக் - மிரட்டும் ட்ரெய்லர் வீடியோ
கபிர் சிங் படத்திக் ஷாஹித் கபூர்
news18
Updated: May 13, 2019, 2:42 PM IST
அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கும் கபீர் சிங் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்த இந்தப் படம் தமிழில் பாலா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

தற்போது அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ்ரீமேக் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகி வருகிறது. துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பனிதா சந்து அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் இரண்டாவது கதாநாயகியாக பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜூன்ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சய்யா இயக்குகிறார்.இந்தப் படம் கபீர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Loading...
ஜூன் மாதம் இந்தப் படம் திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...