அஜித், விஜய் சேதுபதி, அனுஷ்கா சர்மா இணைவார்களா?

மெய்நிகரி நாவலைத் தழுவி கே.வி. ஆனந்த் கவண் திரைப்படத்தை இயக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அஜித், விஜய் சேதுபதி, அனுஷ்கா சர்மா இணைவார்களா?
அஜித், அனுஷ்கா சர்மா, விஜ்ய சேதுபதி
  • News18
  • Last Updated: March 12, 2019, 4:27 PM IST
  • Share this:
தனது நாவல் படமாக்கப்படும் போது அஜித், விஜய் சேதுபதி, அனுஷ்கா சர்மா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் வலம் வருபவர் கபிலன் வைரமுத்து. இதுமட்டுமல்லாது நாவல் எழுதும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். பூமராங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி ஆகிய 3 நாவல்கள் எழுதியிருக்கும் இவர், தற்போது நான்காவதாக புதிய நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், நாவல் எழுதும் பணி தொடங்கப்பட்டு ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்தக் கதையில் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அந்தப் பாத்திரங்களுக்கு நடிகர் அஜித், விஜய்சேதுபதி, அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.


kabilan vairamuthu

முன்னதாக இவர் எழுதிய மெய்நிகரி நாவலைத் தழுவி கே.வி. ஆனந்த் கவண் திரைப்படத்தை இயக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் விஜய் சேதுபதி, விவேக்! - வீடியோ
First published: March 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்