ஹோம் /நியூஸ் /entertainment /

"கபி குஷி கபி கம்" பாடலை மறு உருவாக்கம் செய்துள்ள இந்தோனேசிய நடனக் கலைஞர்கள்.. வைரலாகும் யூ ட்யூப் வீடியோ..

"கபி குஷி கபி கம்" பாடலை மறு உருவாக்கம் செய்துள்ள இந்தோனேசிய நடனக் கலைஞர்கள்.. வைரலாகும் யூ ட்யூப் வீடியோ..

இந்தோனேஷியக் கலைஞர்கள்

இந்தோனேஷியக் கலைஞர்கள்

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பல பிரபலமான இந்திய பாடல்களுக்கு நடனமாடினார். அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  "கபி குஷி கபி கம்" பாடலை இந்தோனேசிய நடனக் கலைஞர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோவை இந்தோனேசிய நடனக் கலைஞர் வினா ஃபேன் பகிர்ந்துள்ளார்.

  "கபி குஷி கபி கம்" வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படம் நகைச்சுவை, குடும்ப நாடகம் மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பியிருந்தது. கரண் ஜோஹரின் எழுத்தி, இயக்கத்தி இருந்த இந்த படத்தை யஷ் ஜோஹரின் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், சாருக்கான், கஜோல், கிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நடித்தனர்.

  ராணி முகர்ஜி கௌரவ வேடத்தில் தோன்றியுள்ளார். மேலும் இந்த படத்தின் இசையும், பாடல்களும் தான் "கபி குஷி கபி கம்" திரைப்படம் இன்று வரை பிரபலமாக இருக்க காரணமாக உள்ளது. ஜடின் லலீத், சந்தேஷ் சாண்டல்யா மற்றும் ஆதேஷ் ஶ்ரீவாஸ்தவா ஆகியோரின் இசையமைத்துள்ளனர். சமீர் மற்றும் அனில் பாண்டே பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

  இந்த நிலையில் இந்த படத்தின் "போல் சுடியன்" என்ற பாடலுக்கு நடனமாடி இந்தோனேசிய நடனக் கலைஞர் வினா ஃபேன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். யூடியூபர் மற்றும் மிகப்பெரிய பாலிவுட் ரசிகரான வினா ஃபேன், தனது யூடியூப் சேனல் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளதற்கு இந்த வீடியோவில் நன்றி கூறியுள்ளார்.

  வீடியோவில் கரீனா கபூர் கானின் பங்கை வினா மற்றும் மற்ற குழு உறுப்பினர்கள் மற்ற நட்சத்திரங்களின் கதாபாத்திரத்தில் நடமாடுகின்றனர். கபி குஷி கபி கம் திரைப்பட அசல் பாடலில் நடிகர்கள் அணிந்திருந்த ஒத்த ஆடைகளை நடனக் கலைஞர்கள் அணிந்து அதை பிரேம்-டு-ஃபிரேமில் நகலெடுத்து சிறப்பாக நடனத்தை வெளிப்படத்தியுள்ளனர்.

  ' isDesktop="true" id="345215" youtubeid="BGsV_iMkByk" category="cinema">

  ஷிவா ஷாவா இன்னும் அமிதாப் பச்சனின் ஹூக் ஸ்டெப் மூலம் நடன தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பாலிவுட் ரசிகர்கள் பெரும்பாலும் பிரபலமான பாடல்களை இந்திய திரைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் மற்றும் ஆர்வத்தின் அடையாளமாகவும் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.  அந்த வகையில்  இந்தோனேசிய நடனக் கலைஞர் வினா ஃபேன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

  இதுவரை 121 பார்வையாளர்கள் மற்றும் 23,000 கருத்துகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பல பிரபலமான இந்திய பாடல்களுக்கு நடனமாடினார். அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். மேலும் பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்டிக்கு இந்த ஜோடி நட்புரீதியான சவாலையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Gunavathy
  First published:

  Tags: Bollywood, Indonesia, Kajol