ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KRK Trailer: ஐ லவ் யூ டூ, ஐ மேரி டூ... காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்!

KRK Trailer: ஐ லவ் யூ டூ, ஐ மேரி டூ... காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்!

காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்

காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. அதோடு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்தப் படத்தில் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்திற்கு இசை அனிருத். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

குஷ்புவுக்கு என்னாச்சு... மருத்துவமனை படத்தால் பதறிய ரசிகர்கள்!

' isDesktop="true" id="735105" youtubeid="oqEsncqQQqA" category="cinema">

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நயன்தாரா, சமந்தா இருவரையும் விஜய் சேதுபதி காதலிப்பதாகவும், அதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றியும் ஜாலியாக சொல்லப்பட்டது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay Sethupathi, Nayanthara, Samantha