ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

kaathuvaakula rendu kadhal : சமந்தாவுக்கு மட்டும் இந்த நாள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!

kaathuvaakula rendu kadhal : சமந்தாவுக்கு மட்டும் இந்த நாள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!

காத்து வாக்கு ரெண்டு காதல்

காத்து வாக்கு ரெண்டு காதல்

kaathuvaakula rendu kadhal samantha : சமந்தாவின் பிறந்த நாளான இன்று, அவரின் நடிப்பின் ரசிகர்களை மகிழ்விக்க காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ரிலீஸ் ஆகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் வெற்றி கொடி கட்டி ஒரு PAN இந்தியா ஸ்டாராகவும் இருப்பவர் நடிகை சமந்தா. இவரின் பிறந்த நாளான இன்று அவரது திரைப்படங்களை பற்றிய ஒரு தொகுப்பு. 

  தமிழ் சினிமா உலகில் ஒரு தமிழ் பெண் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பது குதிரை கொம்பாகவே இருந்தது. 90-களில் அக்கதையை மாற்றி சாதித்து காட்டினார் த்ரிஷா. அவருக்கு பின் அந்த இடத்தில் பொன் வசந்தமாக அமர்ந்தவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவரான சமந்தா...கெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியும் அப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாகவும் நடித்து ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொண்டார்.

  KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் விமர்சனத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்!

  ரவிவர்மன் இயக்கிய ‘மாஸ்கோவின் காவிரி’, அதர்வா கதாநாயகனாக அறிமுகமான ‘பானா காத்தாடி’ படங்களில் நாயகியாய் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. அப்போதே சமந்தாவின் க்யூட்டான அழகில் மயங்கிய சினிமா ரசிகர்கள் நூல் அறுந்த பட்டமாய் தங்கள் மனங்களை தொலைத்தனர்.

  ஜூனியர் என்.டி.ஆருடன் ‘பிருந்தாவனம்’, மகேஷ்பாபுவுடன் ‘தூகுடு’ எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஈகா’ என தெலுங்கில் ஸ்டாராக ஜொலித்த சமந்தா கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் ஜீவாவின் காதல் கண்மணியாக நடித்து காதல் கண்ணதாசன்களின் கனவு நாயகி ஆனார்.

  சூர்யாவுடன் ’அஞ்சான்’…. விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள”… சிவகார்த்திகேயனுடன் ‘சீம ராஜா’… தனுஷுடன் ‘தங்க மகன்’ என முன்னணி நாயகர்களின் நாயகி ஆகி ’சமத்து பெண் சமந்தா’ என்று பெயர் பெற்றார். மேலும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் சினிமாவைக் கலையாகவும் தொழில்முறை உணர்வுடனும் அணுகும் அவரது பாங்கை சொல்லியது.

  ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

  நாயகிகளில் சிகரமான சமந்தா அடுத்து விஜய்யுடன் 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' என மூன்று திரைப்படங்களில் நடித்து இமயமுமானார். இம்மூன்று திரைப்படங்களிலும் தனக்கான பாத்திரத்தை அழகோடு ரசிக்கும்படி வார்த்தார் சமந்தா. அதோடு சிம்ரன், த்ரிஷா வரிசையில் விஜய்யுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நடிகையாக விஜய் ரசிகர்களின் அன்பையும் பெற்றார்.

  பெரிய நட்சத்திரமாக தான் மாறிய பின்னும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரத்திலும்……’புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஒரு குத்து பாடலுக்கு அட்டகாச ஆட்டம்போட்டும் சினிமா மீதான தன் காதலை சொன்ன சமந்தா. சாமானியப் பெண்களின் தன்னம்பிக்கையின் அழகிய ஓவியமே

  சமந்தாவின் பிறந்த நாளான இன்று, அவரின் நடிப்பின் ரசிகர்களை மகிழ்விக்க காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. சோ இன்றைய நாள் சமந்தாவுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Vijay Sethupathi, Kaathu Vaakula Rendu Kadhal, Kollywood, Samantha, Vignesh Shivan