முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சமந்தாவின் பாய் பிரெண்டாக ஸ்ரீசாந்த்... ட்ரெண்டிங்கில் திப்பம் தப்பம் பாடல்!

சமந்தாவின் பாய் பிரெண்டாக ஸ்ரீசாந்த்... ட்ரெண்டிங்கில் திப்பம் தப்பம் பாடல்!

சமந்தா - ஸ்ரீசாந்த்

சமந்தா - ஸ்ரீசாந்த்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்தப் படத்தில் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  • Last Updated :

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தாவின் நண்பராக நடித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்திற்கு இசை அனிருத். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதோடு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்தப் படத்தில் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமந்தாவின் நண்பராக வரும் அந்தக் கதாபாத்திரத்தை திரையில் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

கே.ஜி.எஃப் 2 தயாரிப்பாளர்களுடன் சுதா கொங்கராவின் அடுத்தப்படம்!

' isDesktop="true" id="734724" youtubeid="j64M3CACcr4" category="cinema">

இந்நிலையில் கதிஜா - ராம்போ லவ் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகியிருக்கும் திப்பம் தப்பம் என்ற பாடலில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றுள்ளார். அந்தப் பாடல் தற்போது யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Tamil Cinema