• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விருது வென்ற சமந்தா... கொண்டாடிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ குழுவினர்!

விருது வென்ற சமந்தா... கொண்டாடிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ குழுவினர்!

காத்து வாக்குல ரெண்டு காதல் குழுவினர்

காத்து வாக்குல ரெண்டு காதல் குழுவினர்

2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் நடந்தது.

  • Share this:
    காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினரோடு தான் எடுத்துக் கொண்ட படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் நடிகை சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். எதற்காக தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு கிடைத்தன. இதையடுத்து சிறந்த நடிகைக்கான விருது ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சமந்தாவுக்குக் கிடைத்தது.

    இதைக் கொண்டாடும் விதமாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சமந்தா. விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சமந்தாவுக்கு தங்கள் வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சியடைந்ததை அதில் காண முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: