விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.
விஜய் சேதுபதி-
சமந்தா-நயன்தாரா என ரசிகர்களை சுண்டியிழுக்கும் நட்சத்திர பட்டாளம் ஒருபக்கம் என்றால், மயக்கும் அனிருத்தின் பாடல்கள் மறுபக்கம் என வானளாவிய எதிர்பார்ப்புக்களுடன் வெளியாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம். விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிப்பில் திரைப்படத்தை இயக்க உள்ளதால், இந்த திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா வழக்கமாக பார்த்து பழகிய காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு ஒரு ஆண் இரு பெண்களுக்கு இடையே உள்ள காதல் மற்றும் மோதலை இந்த திரைப்படம் காட்டுகிறது. சற்று பிசகினாலும் ஆபாசமாகவும் விரசமாகவும் ஆகிவிடும் ஆபத்து இருக்கும் இந்த கதையை, கத்திமேல் நடப்பது போல முழுக்க முழுக்க நகைச்சுவையாக கையாள முயற்சி செய்துள்ளார் விக்னேஷ் சிவன். படத்தின் முதல் பாதி முழுவதும் ஒரு நல்ல காதல் படத்தை பார்க்கும் அனுபவத்தையும், படத்தின் இரண்டாவது பாதி இரண்டு பெண்களுக்கும் உள்ளே உள்ள பொஸசிவையும் நகைச்சுவையாக பதிவு செய்கிறது.
மகள் திருமண வரவேற்பை திடீரென நிறுத்திய இயக்குநர் ஷங்கர்?
படம் நெடுக நயன்தாராவை காட்டிலும் சமந்தா, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறார். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள விக்னேஷ் சிவனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அனிருத்தின் பாடல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளதுடன் அனிருத்தின் 25வது திரைப்படம் இது என்பதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் பாடல்கள் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை படம் நெடுக சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், ஒரு சில நகைச்சுவை காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துவதை எடிட்டர் தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனமும் அங்கங்கே எழுகிறது.
KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் விமர்சனத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்!
பீஸ்ட் திரைப்படத்தை அஜித் ரசிகர் கிண்டலடித்து மோசமான விமர்சனங்களை பெறச் செய்த நிகழ்விற்கு பழிவாங்கும் விதமாக, விஜய் ரசிகர்கள் தற்போது அடுத்து அஜீத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவன் திரைப்படத்தை இணையதளங்களில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ள நிகழ்வும் அங்கங்கே அரங்கேறி வருகிறது. இவை அத்தனையும் கடந்து, வார இறுதியில் திரையரங்கிற்கு சென்று கொண்டாட்டமான ஒரு நகைச்சுவை படத்தை பார்த்து வரலாம், என்ற அனுபவத்தை காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தருகிறது. மண முறிவுக்கு பிறகு சமந்தாவிற்கு தமிழில் மீண்டும் வாய்ப்புகளை இந்த திரைப்படம் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.