முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிறிய முதலீட்டில் மாபெரும் வசூல்... 300 சதவீதம் லாபம் சம்பாதித்த காத்து வாக்குல ரெண்டு காதல்!

சிறிய முதலீட்டில் மாபெரும் வசூல்... 300 சதவீதம் லாபம் சம்பாதித்த காத்து வாக்குல ரெண்டு காதல்!

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உலகம் முழுவதும் 66 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

  • Last Updated :

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு குழு.

அதாவது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உலகம் முழுவதும் 66 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. தவிர நம்பத் தகுந்த வட்டாரங்களின் படி, முதல் காப்பி பிஸினெஸில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு 25 கோடி கிடைத்ததாம். ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் 24 கோடி.

தியேட்டர் வசூல் தமிழ்நாடு - 43+ கோடி

மொத்த வெளிநாடுகளில் - 12+ கோடி

தெலுங்கு - 5+ கோடி

கர்நாடகா - 3.5+ கோடி

கேரளா - 2.5+ கோடி

மொத்த வசூல் - 66 கோடி

1 ரூபாய் சம்பளத்தில் பாஜக அண்ணமலை நடித்த கன்னட படத்தின் டீசர் இன்று வெளியீடு

சோனி மியூசிக் நிறுவனத்தில் ஆடியோ ரைட்ஸ் மூலமாக 4 கோடி, இந்தி சாட்டிலைட் உரிமை 6 கோடி (கோல்ட் மைன் பிக்சர்ஸ்). மொத்த வணிக மதிப்பின்படி, தியேட்டரில் 66 கோடி, தொலைக்காட்சி உரிமத்தில் 24 கோடி, மொத்தம் 90 கோடி. இந்தி ஆடியோ உரிமையின் மூலம் மேலும் 10 கோடி. ஆக மொத்தம் 100 கோடி சம்பாதித்துள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    ஆக படத்தின் முதலீட்டில் 300 சதவீதம் லாபம் சம்பாதித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் படம். 25 கோடி தயாரிப்பு செலவில் உருவான ஒரு படம், 100 கோடி சம்பாதித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Director vignesh shivan, Nayanthara