விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடித்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிவரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல் . நயன்தாரா , விஜய் சேதுபதி , சமந்தா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் .
இ தற்குமுன் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாராவும் , விஜய் சேதுபதியும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர் . இந்தப் படத்தின் போதுதான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது . இப்போதுவரை அந்த காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
காத்துவாக்குல காதல் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது . திரையரங்கில் வெளியாக வேண்டிய படம் அது . ஆனால் , படத்தை ஓடிடியில் வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர் . டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக உள்ளது . தீபாவளிக்கு படத்தை வெளியிட வாய்ப்புள்ளது.
இதற்குமுன் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படமும் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது . விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் சன் தொலைக்காட்சியில் முதன்முறை ஒளிபரப்பப்பட்டு உடனடியாக ஓடிடியில் வெளியானது . அடுத்து ஒரேவாரத்தில் அனபெல் சேதுபதி நேரடியாக ஓடிடியில் வெளியானது . இப்போது இவர்கள் இணைந்து நடிக்கும் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது .
நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்களும் , விநியோகஸ்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . ஓடிடி வெளியீட்டை தடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக பல கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர் .
Also read... ஆயுதபூஜை ஸ்பெஷலாக வரும் ஜோதிகா, சசிகுமாரின் உடன்பிறப்பே!
ஓடிடியில் வெளியான படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்பது அதில் ஒன்று . இந்த கட்டுப்பாடு காரணமாக சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முடியாமல் போனது . அதேபோல் , ஒரு படம் திரையரங்கில் வெளியானால் , நான்கு வாரங்கள் கழித்தே அதனை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பது இன்னொரு கட்டுப்பாடு . இதனை மீறியதால் இந்தி தலைவி பதிப்பை பிவிஆர் உள்ளிட்ட சில மல்டிபிளக்ஸ்கள் திரையிடவில்லை .
நயன்தாரா , விஜய் சேதுபதி படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாவதால் இவர்கள் இருவர் மீதும் திரையரங்கு உரிமையாளர்கள் மறைமுக நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு . Published by: Vinothini Aandisamy
First published: October 01, 2021, 09:56 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Actor Vijay Sethupathy , Actress Nayantara , Actress Samantha , Director vignesh shivan