சாயிஷாகிட்ட லவ் சொல்லவே இல்ல... காப்பான் மேடையில் சீக்ரெட் உடைத்த ஆர்யா!

news18
Updated: July 22, 2019, 1:35 PM IST
சாயிஷாகிட்ட லவ் சொல்லவே இல்ல... காப்பான் மேடையில் சீக்ரெட் உடைத்த ஆர்யா!
ஆர்யா - சாயிஷா
news18
Updated: July 22, 2019, 1:35 PM IST
காப்பான் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யா, தனது மனைவியுடனான காதல் சீக்ரெட்டை நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிளே பாயாக அறியப்படும் ஆர்யா, வனமகன் படத்தில் சாயிஷாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் 10-ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் இணைந்து டெடி படத்தில் நடித்து வருகின்றனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்துள்ளனர்.


இந்நிலையில் காப்பான் பட விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா, இருவருக்குமான காதல் சீக்ரெட்டை மேடையில் பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “நான் என்னுடைய காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லவில்லை. ஏனெனில் இதற்கு முன் நான் பெண்களிடம் நேரடியாக காதலைச் சொல்லி அது தவறாக போயிருக்கிறது. அதனால் சாயிஷாவை காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லாமல் அவரது அம்மாவிடம் தான் சொன்னேன். அதற்கு பின்னர் தான் சாயிஷாவுக்கு தெரியும்” என்று நகைச்சுவையாக பேசினார்.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்

Loading...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...