ஆக்‌ஷன் காட்சிகளுடன் கலர்ஃபுல்லாக வெளியான காப்பான் ட்ரெய்லர்

ஆக்‌ஷன் காட்சிகளுடன் கலர்ஃபுல்லாக வெளியான காப்பான் ட்ரெய்லர்
காப்பான் படத்தில் சூர்யா
  • News18
  • Last Updated: September 4, 2019, 7:19 PM IST
  • Share this:
காப்பான் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் காப்பான் என்ற டைட்டிலும் வெளியாகும் இந்தப் படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற டைட்டிலில் வெளியாகிறது.


இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். படத்தில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளும், கலர் ஃபுல்லான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...