காப்பான் பட ட்ரெய்லர் நாளை ரிலீஸ்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காப்பான் பட ட்ரெய்லர் நாளை ரிலீஸ்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காப்பான் படத்தில் சூர்யா - சாயிஷா
  • News18
  • Last Updated: September 3, 2019, 7:12 PM IST
  • Share this:
காப்பான் பட ட்ரெய்லர் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீடியோ பார்க்க: வலுக்கும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மோதல்!

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...