‘காப்பான்’ படத்தின் 2-வது பாடல் ‘குறிலே’... ரிலீஸ் தேதி அறிவிப்பு

Web Desk | news18
Updated: July 18, 2019, 6:01 PM IST
‘காப்பான்’ படத்தின்  2-வது பாடல் ‘குறிலே’... ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூர்யா - சாயிஷா
Web Desk | news18
Updated: July 18, 2019, 6:01 PM IST
‘காப்பான்’  படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான ‘சிறுக்கி’ என்ற பாடலும், டீசரும் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.






இந்நிலையில் படத்தின் 2-வது பாடலான குறிலே என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.

வீடியோ பார்க்க: பாரதிராஜாவின் அரசியல்!

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...