காப்பான் படத்தில் விஜய் சேதுபதியை கிண்டலடித்த கே.வி.ஆனந்த்!

காப்பான் படத்தில் விஜய் சேதுபதியை கிண்டலடித்த கே.வி.ஆனந்த்!
  • News18
  • Last Updated: September 26, 2019, 12:28 PM IST
  • Share this:
காப்பான் படத்தின் ஒருகாட்சியில் விஜய் சேதுபதியை கிண்டலடித்துள்ளனர்.

அயன், மாற்றான் படங்களை அடுத்து கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் காப்பான் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமர் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் சாயிஷா, ஆர்யா, உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான காப்பான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியை கிண்டலடித்து காட்சியமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சமுத்திரகனியின் மனைவி கதாபாத்திரம் படிக்கும் புத்தகத்தில் விஜய்சேதுபதியின் படம் இடம்பெற்றிருக்கும்.


சமுத்திரக்கனி தன்னிடம் எப்படி காதலைச் சொன்னார் என்பதை நடித்துக் காட்டும் அந்தக் காட்சியில் பூர்ணா கையில் விஜய்சேதுபதி புகைப்படத்துடன் கூடிய புத்தகம் இருக்கும்.

அந்த இடத்தில் வசனம் பேசிய சமுத்திரக்கனி, இவன் பொண்ணுங்க நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்குவான் என்று கூறுவார். விஜய்சேதுபதியை கிண்டல் செய்யும் இந்தக் காட்சி அவரது ரசிகர்கள் ரசிக்கும்படியாகவே அமைந்துள்ளது.கே.வி.ஆனந்த் எப்போதும் தான் இயக்கிய முந்தைய படத்தை கிண்டலடிப்பதை வழக்கமாகக் கொண்டவர். அவர் இயக்கிய கவண் படத்தில் விஜய்சேதுபதி நடித்திருப்பதால், அவரை இந்தக் காட்சியில் பயன்படுத்தி கிண்டலடித்துள்ளார்.காப்பான் படம் பார்க்கும் ரசிகர்கள் விஜய்சேதுபதிக்காகவும் கைதட்டி மகிழ்வதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: திரைப்பட விழாவில் வண்ண உடையில் ஜொலித்த நாயகிகள்

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading