காப்பான் படத்தின் ‘குறிலே’ பாடல் ரிலீஸ் - வீடியோ

news18
Updated: July 19, 2019, 6:52 PM IST
காப்பான் படத்தின் ‘குறிலே’ பாடல் ரிலீஸ் - வீடியோ
காப்பான் படத்தில் சூர்யா - சாயிஷா
news18
Updated: July 19, 2019, 6:52 PM IST
‘காப்பான்’  படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான ‘சிறுக்கி’ என்ற பாடலும், டீசரும் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் படத்தின் 2-வது பாடலான ’குறிலே’ என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் கபிலன் குறிலே பாடலை எழுதியுள்ளார். ஜாவித் அலி, தர்ஷனா ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

குறிலே பாடல் வெளியானதை அடுத்து அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...