காப்பான் ஆகஸ்டில் ரிலீஸ் இல்லை... புதிய தேதியை அறிவித்தது படக்குழு!

news18
Updated: August 4, 2019, 12:34 PM IST
காப்பான் ஆகஸ்டில் ரிலீஸ் இல்லை... புதிய தேதியை அறிவித்தது படக்குழு!
காப்பான் படத்தில் சூர்யா - சாயிஷா
news18
Updated: August 4, 2019, 12:34 PM IST
காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது.


முன்னதாக ஆகஸ்ட் 15-ம் தேதி காப்பான் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. அதே தேதியில் பிரபாஸின் சாஹோ படம் வெளியாவதால் ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு காப்பான் ரிலீஸ் தள்ளிப் போனது. பின்னர் சாஹோ ரிலீஸ் ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.


இதையடுத்து தற்போது இறுதியாக செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: விஜய் சேதுபதியை புகழ்ந்த அதீதி ராவ்!

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...