ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனதை வருடி லைக்ஸை அள்ளும் 'வெந்து தணிந்தது காடு' பட பாடல்…

மனதை வருடி லைக்ஸை அள்ளும் 'வெந்து தணிந்தது காடு' பட பாடல்…

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு - சிதி இத்னானி

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு - சிதி இத்னானி

வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோ பாடலாக 'காலத்துக்கும் நீ வேணும்' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.

மாநாடு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்த சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையா படங்களின் பாடல்கள் மெகா ஹிட்டாகின.

இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோ பாடலாக 'காலத்துக்கும் நீ வேணும்' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.

இதையும் படிங்க - வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?

தாமரை எழுதியுள்ள இந்த பாடலை சிம்புவும், ரக்சிதா சுரேஷும் இணைந்து பாடியுள்ளனர்.

யூடியூபில் கடந்த 6-ம்தேதி வெளியான இந்த பாடல் தற்போது வரை 23 லட்சம் பார்வைகளையும், 1.54 லட்சம் விருப்பங்களையும் கடந்துள்ளது.

' isDesktop="true" id="743090" youtubeid="VprGcgD4wlM" category="cinema">

யூடியூபில் பாடலை பார்க்கும் ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமான், சிம்பு, ரக்சிதா சுரேஷ் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிம்புவின் மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திலும் ஸ்லிம்மான தோற்றத்தில் மிக இயல்பான காட்சிகளில் சிம்பு நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: AR Rahman, Simbu