’ஆன்டி இந்தியன்’ பாடல் ஏன்? பாடலாசிரியர் அறிவரசு விளக்கம்

ஆன்டி இந்தியன்’ என்பது எளிதில் கடந்து செல்லக் கூடிய வார்த்தை கிடையாது. அந்த வார்த்தையைக் கிண்டலாக நாம் பயன்படுத்தி வருகிறோம்.

’ஆன்டி இந்தியன்’ பாடல் ஏன்? பாடலாசிரியர் அறிவரசு விளக்கம்
அறிவரசு
  • News18
  • Last Updated: April 19, 2019, 4:05 PM IST
  • Share this:
காலா பட படலாசிரியர் அறிவரசு உருவாக்கியுள்ள  தெருக்குரல் என்ற ஆல்பத்தின் ஒரு பகுதியாக ‘ஆன்டி இந்தியன்’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஆன்டி இந்தியன் என்ற வார்த்தை சமீப காலத்தில் சமூக ஊடகங்களிலும் மீம்ஸ்களிலும் பிரபலமாகி உள்ளது. பா.ஜ.க தேசியச் செயலர் எச்.ராஜா பத்திரிகையாளர் ஒருவரை ஆன்டி இந்தியன் என்று கூறிய பிறகு இந்த வார்த்தை கேலிக்கும் கிண்டலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வார்த்தையைக் கொண்டு ஸ்டெர்லைட் விவகாரம், விவசாயிகள் நிலைமை என தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தனது ராப் பாடல் மூலம் பேசுகிறார் காலா படத்தில் உரிமை மீட்போம் பாடலின் ஆசிரியர் அறிவரசு.

தெருக்குரல் என்ற ஆல்பத்தின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ள இந்த பாடலை அறிவரசு மற்றும் ஆஃப்ரோ இணைந்து உருவாக்கியுள்ளனர்.


இந்த பாடல் குறித்து நம்மிடம் பேசிய அறிவரசு, "ஆன்டி இந்தியன்’ என்பது எளிதில் கடந்து செல்லக் கூடிய வார்த்தை கிடையாது. அந்த வார்த்தையைக் கிண்டலாக நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உண்மையில் மிகவும் வலி தரக்கூடிய வார்த்தை அது. பிரிவினைவாதத்தைத் தூண்டக்கூடிய வார்த்தை அது. எனவே அந்த வார்த்தையைக் கொண்டு, வாக்களிக்கும் நாளுக்கு முன்னர் மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டிய பல்வேறு விஷயங்களை இந்த பாடலில் பேசியுள்ளோம்.

இது பா.ஜ.கவுக்கு எதிரான பாடல் அல்ல. மதவாதம் , பிரிவினைவாதம், கார்ப்பரேட் அரசுக்கு எதிரான பாடல். இன்று அதன் முகம் பா.ஜ.க. நாளை அதன் முகம் காங்கிரஸ் ஆக இருந்தால் அவர்களை எதிர்த்தும் தான் இந்த பாடல்.

இந்த பாடலில் நம் சமூகத்தில் வரலாற்று ரீதியாக உள்ள பிரச்னைகள், சமகால அரசியல் பிரச்னைகள், நம்மிடையே நிலவும் சமூக முரண்கள்- அதாவது- காவிரி பிரச்னை என்றால் ஒன்று சேருகிறோம், சேரியில் பிரச்னை என்றால் ஒதுங்கி நிற்கிறோம் - என மூன்று பாகங்களாக பாடியுள்ளோம்' என்றார்.

Loading...

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பாடல், மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய பாடல் பாடியுள்ள அறிவரசு தெருக்குரல் ஆல்பத்தில் மேலும் ஐந்து பாடல்களை வெளியிடவுள்ளார்.

Also see:

First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...