என் கருத்தை திருமாவளவனுக்கு எதிராக திசை திருப்பாதீர்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்

கருத்தை, விசிக தலைவர் திருமாவளவனின் மீது மடை மாற்றாமல், அரசியல் கட்சிகள் தலித் மக்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும் என்று பா. ரஞ்சித் மீண்டும் பதிவிட்டுள்ளார்.

என் கருத்தை திருமாவளவனுக்கு எதிராக திசை திருப்பாதீர்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்
  • Share this:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டதையடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வந்தன.

அப்போது இயக்குநர் ரஞ்சித், விடுதலை சுவையறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆடுகள்:தலித் மக்கள் புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள்.


— pa.ranjith (@beemji) May 23, 2020

இயக்குநர் ரஞ்சித்தின் ட்வீட், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை விமர்சித்ததாக பின்னூட்டங்கள் இடப்பட்டன. அதை மறுத்த இயக்குநர் ரஞ்சித், இந்த கருத்தை, விசிக தலைவர் திருமாவளவனின் மீது மடை மாற்றாமல், அரசியல் கட்சிகள் தலித் மக்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும் என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்.
First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading